தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை.
கோவை: கோவை வெள்ளலூர் அருகே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடிரென தீ பிடித்து எரிந்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மாலை கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் உள்ள காலியிடத்தில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இதையடுத்து, லாரி அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சு மற்றும் மரம் முற்புதர்களிலும் தீ பரவியது, சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், அங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.