தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ பெரியகுளம்‌ தோட்டக்கலை கல்லூரியில்‌ முத்தமிழ்‌ விழா

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கிவரும்‌ பெரியகுளம்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்றும், இன்றும் முத்தமிழ் விழா நடந்தது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கிவரும்‌ பெரியகுளம்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ முத்தமிழ்‌ விழா நேற்றும், இன்றும் நடைபெற்றது.



அதன்‌ முதல்‌ நாளன்று, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி தலைமையில்‌ குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழாவானது தொடங்கியது.

மாணவா்களின்‌ கலைத்‌ திறமையை வெளிப்படுத்தும்‌ விதம் அமைக்கப்பட்ட வண்ணக்‌ கலைக் கண்காட்சி, வாசனை பொருள்‌ மற்றும்‌ பூக்‌ கோலங்களை துணைவேந்தர் பேராசிரியா வெ. கீதாலட்சுமி பார்வையிட்டார்‌.

பின்னர், சிறப்புரையில்‌ மாணவர்களின்‌ கலைத் திறமையைப்‌ பாராட்டியதோடு, தன்‌ கல்லூரி அனுபவங்களையும்‌ மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்‌. மேலும்‌, கல்லூரியின்‌ அறுவடைக்கு பின்னர் தொழில்நுட்ப பின்செய்‌ நேர்த்தி துறை ஆய்வகத்தையும்‌ திறந்து வைத்தார்‌.

இவ்விழாவிற்கு, கல்லூரியின்‌ முதன்மையர் முனைவர்‌. த. ஆறுமுகம்‌ தலைமையுரை வழங்கினார்‌. தொடக்க விழாவில்‌, பட்டிமன்றப்‌ பேச்சாளர்‌ கவிதா ஜவஹா்‌ கலந்து கொண்டு "அமுதும்‌ தமிழும்‌" என்ற தலைப்பில்‌ சொற்பொழிவாற்றினார்.

கவிக்கதம்ப நிகழ்ச்சியின்‌ சிறப்பு விருந்தினராக, திரைப்படப்‌ பாடலாசிரியர் மற்றும்‌ கவிஞா்‌ அறிவுமதி கலந்து கொண்டு மாணவர்களின்‌ கவித்திறமையைப்‌ பாராட்டினார்‌.



இவ்விழாவினை மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர்‌. பெ. கீதாராணி அவா்களோடு மாணவர்‌ மன்ற செயலர் (நான்காம்‌ ஆண்டு) அ. வெங்கடேஷ்‌ பிரசாத்‌ மற்றும்‌ மாணவர்‌ மன்ற துணை செயலர் அ.மே. ஜீனோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...