சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜ் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரின் கணவர் கார்த்திகேயன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை: சென்னை இராயப்பேட்டையில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ் (48) என்பவர் கடந்த 2 ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அண்ணா சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், வழக்கின் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் லோகேஸ்வரியின் கணவர் கார்த்திகேயன், கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, சென்னை அண்ணாசாலை போலீசார் கார்த்திகேயனை சென்னை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.