கோவை வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை நீக்கம்: போராட்டம், நன்றி கூட்டமாக மாற்றம் - பேரூர் ஆதீனம்

வெள்ளிங்கிரி மலை ஏற்றதுக்கு வனத்துறை தற்போது அனுமதி அளிப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்துக்கு பதில், நன்றி தெரிவிப்பு கூட்டமாக இதை மாற்றியுள்ளோம் என பேரூர் ஆதீனம் தெரிவித்தார்.


கோவை: கோவை பூண்டி பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏற, சமீபத்தில் வனத்துறையினர் பக்தர்களுக்கு தடை விதித்தனர். ஆண்டில் சில நடகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த மலை ஏற்றதுக்கு, தீடீரென தடை விதித்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வெள்ளிங்கிரி மலை பகுதிகளில் அதிக அளவு சுற்றித்திரிவதால், பக்தர்களின் நலன் கருதியேன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அதன்படி, கடந்த மே 1 ஆம் தேதி முதல் வெள்ளிங்கிரி மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், வனத்துறை சார்பில் போடப்பட்டத் தடை திரும்ப பெற்றதால் அறிவிக்கப்பட்ட போராட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாற்றப்பட்டது.



இது குறித்து பேசிய பேரூர் ஆதீனம் அடிகளார், "இந்த சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 30 ஆம் தேதி யாரும் வெள்ளியங்கிரி செல்லக்கூடாது என திடீரென அறிவித்து விட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம், அவர்கள் மூலம் வனத்துறை அமைச்சரை சந்தித்து முதலில் அனுமதி பெற்றோம். இருப்பினும், மீண்டும் மலை ஏற திடீரென நிறுத்தி விட்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செயத்ததன் அடிப்படையில், இங்கு நாம் கூடியுள்ளோம். ஆனால், வனத்துறை தற்போது அனுமதி அளிப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்துக்கு பதில், நன்றி தெரிவிப்பு கூட்டமாக இதை மாற்றியுள்ளோம்" என தெரிவித்தார்.



இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சு.பழனிச்சாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...