கோவையில் ஏலம் விடப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாக கூறி, ரூ.38.50 லட்சம் மோசடி செய்த பெண்கள் 2 பேர் கைது

தனியார் வங்கியில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாக கூறி ரூ.38.50 லட்சம் மோசடி செய்த இரு பெண்களை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஏலம் விடப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாக கூறி, ரூ.38.50 லட்சம் மோசடி செய்த பெண்கள் 2 பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்யப்பட்டனர்.

கோவையை அடுத்த பிரஸ்காலனி சி.எஸ்.ஐ. நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (43). இவருடைய தந்தை ஞானசிங் என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தில் 13 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர், ஞானசிங் கடந்த 2010-ம் ஆண்டு இறந்தையடுத்து, அந்த நிலத்தை பிரின்ஸ் ராஜின், மூத்த சகோதரரான, இன்பராஜ் தனியார் வங்கியில் ரூ.42 லட்சத்துக்கு அடகு வைத்தாக தெரிகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி நிர்வாகம் சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த சொத்தில் பிரின்ஸ் ராஜிக்கும் பங்கு உண்டு என்பதால், சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து கடன் மீட்பு தீர்ப்பாயம் மற்றும் கூடுதல் துணை நீதிபதி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் கிச்சன் இன்டீரியர் டிசைன்ஸ் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியான கவுண்டம்பாளையம் சேர்ந்த சுமதி (44) மற்றும் நிர்வாக இயக்குனர் கல்பனா (42) ஆகியோர் குட்டி என்பவர் மூலம் இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து கொண்டு, பிரின்ஸ் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சொத்து பிரச்சினையை தீர்க்க சாய்பாபா காலனியில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டு உள்ளனர்.

இதை உண்மை என நம்பிய அவர் அவர்கள் கூறியவாறு அலுவலகத்துக்கு சென்று, சுமதி மற்றும் கல்பனா ஆகியோரை சந்தித்தார். அப்போது, வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்த உத்தரவில் தவறு உள்ளதாகவும், நீதிமன்றத்தில் தலையிட்டு வங்கி பறிமுதல் செய்த சொத்துக்களை மீட்டுத்தருவதாகவும் கூறி உள்ளனர்.

மேலும், சொத்துக்களை பறிமுதல் செய்த தனியார் வங்கியில் இருந்து ரூ.3 கோடி இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அத்துடன் தங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி ஒரு சில அரசியல் வாதிகள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை காட்டி உள்ளனர்.

இதையடுத்து, பிரின்ஸ் ராஜ் தனது குடும்ப சொத்து திரும்ப கிடைக்கும் என்று நம்பினார். சொத்துகளை பறிமுதல் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய ரூ.60 லட்சம் தரும்படி அவரிடம் சுமதி மற்றும் கல்பனா கேட்டனர். இதையடுத்து, பிரின்ஸ் ராஜ் 2020-ம் ஆண்டில் 2 பேரிடமும் ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில், பிரின்ஸ் ராஜுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆணை பெற்றதாக சுமதி கூறினார். ஆனால், கடந்த 1½ ஆண்டுகளாக அவர் கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கவில்லை என்பதால், தொடர்ந்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் இருவரும், பல்வேறு காரணங்கள் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பிரின்ஸ் ராஜ், தனது பணத்தை திரும்பக் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், சுமதி, கல்பனா ஆகியோர் பிரின்ஸ் ராஜிடம் பணத்தை திரும்ப தருகிறோம் என்று கூறி காசோலை வழங்கியுள்ளனர்.ஆனால், வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பப் பெறப்பட்டது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரின்ஸ் ராஜ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.இந்த நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவின்பேரில் சுமதி, கல்பனா ஆகியோர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தனியார் வங்கியில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாக கூறி பிரின்ஸ் ராஜிடம் ரூ.38.50 லட்சம் மோசடி செய்த சுமதி, கல்பான ஆகியோரை நேற்று போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...