கோவையில்‌ ரூ.978.73 கோடியில்‌ நடைபெற்று வரும்‌ சீர்மிகு நகர திட்டப்‌ பணிகள்: ஒரு நபர்‌ விசாரணை குழு தலைவா்‌ ஆய்வு!

கோவை மாநகராட்சியில்‌ மே 5-6 ஆகிய தேதிகளில்‌ ஒரு நபர்‌ விசாரணை குழு தலைவர்‌ டேவிதார்‌ இ.ஆ.ப. (ஓய்வு), சீர்மிகு நகர திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுங்கரா, முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சீர்மிகு நகர (Smart City,) திட்டத்தின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ திட்ட பணிகளை 05.05.2022 ம்‌ தேதி (நேற்று) ஒரு நபர்‌ விசாரணை குழுத்‌ தலைவா்‌ டேவிதார்‌.இ.ஆ.ப.(ஓய்வு) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



அதனை தொடர்ந்து (06.05.2022) இன்றும் சீர்மிகு திட்டத்தின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பையோ மைனிங்‌ பணி, பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள்‌, குளங்கள்‌ புனரமைத்தல்‌ பணிகள்‌, மாதிரி சாலை, நுண்‌ உரக்கிடங்கு, பல அடுக்கு வாகனம்‌ நிறுத்தும்‌ இடம்‌, ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும்‌ கட்டளை மையம்‌ மற்றும்‌ பல்வேறு திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்.

அதனை தொடாந்து, கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்ட அரங்கத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில்‌ செயற்பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி/இளம்‌ பொறியாளர்கள்‌, கணக்கு அலுவலர்கள்‌, உதவி ஆணையாளா்கள்‌, சீர்மிகு திட்ட அலுவலர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்கள்‌ ஆகியோருடன்‌ ஆய்வு கூட்டம்‌ நடத்தி நடைபெற்று வரும்‌ பல்வேறு பணிகள்‌ குறித்து ஆலோசனைகள்‌ வழங்கினார்.

முன்னதாக, நேற்று நடந்த ஆய்வில், நுண்‌ உரக்கிடங்குகள்‌, விளையாட்டு மைதான மின்‌ விளக்கு கோபுரங்கள்‌, மாதிரி சாலை, சோலார்‌ மரம்‌, தானியங்கி குடிநீர்‌ மானி, பூங்காக்கள்‌, பாதாள சாக்கடை திட்ட பணிகள்‌, குளங்கள்‌ புனரமைத்தல்‌ பணிகள்‌ மற்றும்‌ 24/7 குடிநீர்‌ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...