கோவையில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது

கோவையில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயதான முதியவரை செட்டிபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பள்ளி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (63). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். பின்பு, சிறுவனின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் குப்புசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...