தடாகம் அருகே யானை இறப்பு: நுரையீரல், இதயத்தில் ரத்த கசிவால் உயிரிழப்பு - கால்நடை மருத்துவர்கள் அறிக்கை

கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.


கோவை: நேற்று, கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.



கோவை சின்னதடாகம் பகுதியில் நேற்று 20 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் இறந்த யானையின் உடலில் இருந்து கசிந்த திரவங்களை சேகரித்து ஆந்தராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வில், யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று உயிரிழந்த யானைக்கு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூராய்வு நடத்தினர்.



அதில், யானையின் இதயம் மற்றும் நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், யானையிலிருந்து சேகரித்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ள மருத்துவர்கள் ஆய்வு முடிவின் அடிப்படையிலேயே ரத்த கசிவிற்காக காரணம் என்ன என்பது தெரியவரும், என தெரிவித்துள்ளனர்.

கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...