ஊட்டி அருகே ஆலங்கட்டி மழை: 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் சேதம்

ஊட்டி அருகே பெய்த ஆலங்கட்டி மழைக்கு, 200 ஏக்கரில் பயிரிட்ட மலை காய்கறிகள் சேதமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இடுஹட்டி சுற்று வட்டார பகுதிகளான மொரக்குட்டி, கொதுமுடி, கக்குச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில், ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இப்பகுதிகளில், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு தோட்டங்கள் அதிகளவில் உள்ள நிலையில், நேற்று பெய்த மழையில், மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. அங்கு வைக்கப்பட்ட, 15 மோட்டார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பயிர் சேதமான பகுதிகளில் தோட்டக்கலை துறையினர், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து இடுஹட்டி ஊர் தலைவர் பெள்ளி நிருபர்களிடம் கூறுகையில், இடுஹட்டியில் இரண்டு நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார், 200 ஏக்கர் மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமானது. தோட்டக்கலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம், என்றார்.

இது குறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், மழையால் பயிர் சேதமான பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...