குன்னூரில் கார் மோதி காட்டெருமை பலி

குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று சாலையை கடக்க முயன்ற காட்டெருமை மீது கார் மோதிய சம்பவத்தில், காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னுார் சிம்ஸ் பார்க் அருகே நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது, சாலையை கடந்த காட்டெருமை மீது கார் மோதி உள்ளது.

அதில், காட்டெருமையின் தாடை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த விபத்தில் காரும் சேதமடைந்தது. இரவு நேரம் மற்றும் மழை பெய்ததால் , இறந்த காட்டெருமையை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர், இன்று காலை பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இறந்த காட்டெருமை உடல், வனத்துறை ஓய்வு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரேஞ்சர் சசிகுமார் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.

இந்த விபத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...