சென்னையில் "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில் நடந்த கலை நிகழ்ச்சியைப் போன்று கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கோவை: சென்னையைப் போன்று கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும் 'நம்ம ஊரு திருவிழா" நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதக் கூட்டத்தின் போது கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், உலகெங்கும் தமிழகத்தின் நாட்டுப்புற கலை வடிவங்களை அறிய செய்யவும் 2021-22-ஆம் ஆண்டு பிரமாண்ட கலை விழா "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்டது.
நம்ம ஊரு திருவிழா
அதே போன்று கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நம்ம ஊரு திருவிழாக்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞா்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படும் விழாக்கள் மூலம் தோந்தெடுக்கப்படுவா்.
ரூ.6 கோடி ஒதுக்கீட்டில் நடத்தப்படும், இவ்விழா மூலம் தமிழகத்தின் அரிய கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், அவற்றை வளர்க்கும், கலை வாய்ப்புகள் வழங்கி கலைஞா்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வாய்ப்பாக அமையும்.
மேலும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அரசு கவின் கலைக் கல்லூரி புனரமைப்பு
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
பாரம்பரிய கட்டடத்தில் செயல்படும் நாட்டின் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் கட்டிடம், அதன் பாரம்பரிய அழகு மாறாமல் புது பொலிவூட்டும் வகையில் ரூ.7.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படும்.
அதேபோல ரூ.15.68 கோடி நிதி ஒதுக்கீட்டில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி துறைகள் மற்றும் வகுப்பறைகளுக்கு புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள், கணினி கூடம் கலையரங்கம், மாணவ மாணவியர் விடுதிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கல்லூரியின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்படும்.
மேலும், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள், இசை பள்ளிகள் மற்றும் ஜவஹா் சிறுவா் மன்றங்களுக்கு இசைக்கருவிகள், மின்னணு சாதனங்கள், துணை சாதனங்கள், கணினி கூடங்கள், மென்பொருட்கள், ஒலிப்பதிவு கூடங்கள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வழங்கி கற்பித்தல் தரம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின், ஆண்டு அரசு நல்கை ரூ.3 கோடியாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.