திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களை நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பதாகக் கூறி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பதாகக் கூறி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்கள் என அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 30- ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களை நீர்நிலை புறம்போக்கு என கூறி காலி செய்ய வற்புறுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு நத்தம் புறம்போக்கு என நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.