'ஏஜிஎஸ் ஹெல்த் கேர்' முதலாம் ஆண்டை முன்னிட்டு கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம்..!

கோயம்புத்தூர் பிரஸ் கிளப் மற்றும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.



கோவை: கோயம்புத்தூர் பிரஸ் கிளப் மற்றும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனை இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. 



இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார். 

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வருடத்தில் அனைத்து நாட்களும், வெயில், மழை பாராமல் களத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் நலனை கருதி, இந்த முகாமை கோயம்புத்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முகாமில், இரத்த அழுத்தம், சக்கரை நோய் பரிசோதனைகள், தோல் வியாதி சமந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த உணவு பழக்க வழக்கங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பத்திரிக்கையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. 

"கொரோனா தொற்று காலத்திலும் கடினமான பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களாக திகழும் பத்திரிக்கையாளர்களுக்கு, உடல் நல பாதுகாப்பு அளிக்க இது சரியான தருணம். 

மக்களிடையே ரத்த அழுத்தம், சர்க்கரையால் ஏற்படும் சிக்கல்கள் (நோயால் பாதிப்பு மற்றும் இறப்புக்கான வாய்ப்பு) பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இது அவர்களின் குடும்பத்தினரில் பொருளாதாரத்தை மிகவும் பாதிப்படையச் செய்யும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை அளிக்க முடியும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய சிபாரிசு செய்கிறோம். எந்த நோயையும் வருமுன் காப்பது சிறப்பானது", என்று ஏஜிஎஸ் மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர். ஆதித்யன் குகன் துவக்க உரையாற்றினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...