நீர்வரத்து இல்லாத, கோவில் குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி மனு: களத்தில் இறங்கிய கோவை எம்.பி..!

நீர்வரத்து இல்லாத, கோவில் குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை: நீர்வரத்து இல்லாத, கோவில் குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்டத்தில் அரசு ஆட்சேபகரமான பகுதி என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் பத்தாண்டு காலமாக எவ்வித நீர்வரத்தும் இல்லாத குடியிருப்புகளுக்கும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



மனு அளிக்க வந்தவர்கள் "மாவட்டம் முழுவதும் பட்டா கேட்டு காத்திருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரால் வெறியேற்றாதே, கோவில் நிலங்களில் காலம் காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்ற நோட்டீஸ்களை எடுத்து வந்திருந்தனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நீர் நிலை பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது எனவும் தெரிவித்தார்.

நீர் நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அந்த மக்கள் வாழ்ந்து வரும் போது அவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்பது தான் எங்களில் பிரதானமான கோரிக்கை எனவும் கூறினார்.

கோவையில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிசையில் வாழும் மக்களை நகரத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் அப்புறப்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

வாலாங்குளம் பகுதியில் குளத்தை மறைத்து அரசு கட்டிடங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றை அரசே கட்டி வைத்து விட்டு மக்களை மட்டும் அப்புறப்படுத்துவது என்பது மாற்று இடம் கூட வழங்க தேவையில்லை என்ற உத்தரவை வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதே போல் கோவில் நிலங்களில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதையும், நாங்கள் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார். எனவே தமிழக அரசு இதை வரையறை படுத்தி அந்த மக்களுக்கு அந்த இடத்திலேயே பட்டா வழங்கி வீடு கட்ட உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் சில அமைப்புகள் கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் தங்களிடம் வழங்க வேண்டும் என கூறி வருவதாக தெரிவித்த அவர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்கள் அத்துறையின் கீழேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...