ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிடார் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சார்பாக, கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிடார் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சார்பாக, கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டங்களின், மூலம் குளக்கரைகளை அழகுபடுத்துவது, சாலைகளை மேம்படுத்துவது, குடிநீர் திட்டங்களை செயல்படுவத்துவது, பாரம்பரிய இடங்களை வண்ணமயமாக மாற்றுவது போன்ற திட்டங்களை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வந்தது.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில், ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் 30 முதல் 60 சதவீதம் வரை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இத்திட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக, அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக அவரது உறவினர்கள், தொழில் பார்ட்னர்களுக்கு டெண்டர் பணிகள் ஒதுக்கப்பட்டு, ஆதாயம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிடார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த ஆணையம் 3 மாத காலத்திற்கு அறிக்கை சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, டேவிடார் ஆணையம், தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நகரங்களில் நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்து வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருப்பூரில் ஆய்வு செய்த அவர், இன்று மாலை கோவையில் ஆய்வு மேற்கொண்டார். கோவை வாலாங்குளம் குளக்கரையில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்.ஜி.எஸ் நிறுவனம் ஆகியோரிடம் தகவல்களை கேட்டறிந்தார்.
மேலும், இப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? எவ்வளவு சதவீதம் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது? தற்போதுமேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் என்னென்ன? முடிக்கப்பட வேண்டிய பணிகள் எவ்வளவு? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
ஏற்கனவே, பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு, இந்த ஆணைய விசாரணை மேலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.