முதலமைச்சர், கோவை மாவட்ட ஆட்சியரை விசாரிக்க வேண்டும் என்றும் தங்கள் சங்கத்தின் மீது தவறு இருந்தால் தங்களுக்கு தண்டனை கொடுக்கலாம், இல்லையெனில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
கோவை: சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில், சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், அவர்களது கோரிக்கை மனுக்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதற்கு கேள்வி எழுப்புயதற்குமாவட்ட ஆட்சியர் அலட்சியமாக பதில் அளித்து அவமதித்ததாக கூறி,விவசாய சங்க தலைவர் கந்தசாமி உட்பட விவசாயிகள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்தும் ஆட்சியருக்கு ஆதரவாக பல்வேறு விவசாய சங்கங்கள் குரல் கொடுத்தன. மேலும், கோவை ஆட்சியர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார் எனவும், சில பேருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளாக கூடாது, என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை மீண்டும் முன் வைத்தும், மாவட்ட ஆட்சியரின் அந்த செயலை கண்டித்தும், ஆட்சியரை மாற்றக் கோரியும், கோவை பவர் ஹவுஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் கோவை மாவட்ட ஆட்சியரை விசாரிக்க வேண்டும் என்றும் தங்கள் சங்கத்தின் மீது தவறு இருந்தால் தங்களுக்கு தண்டனை கொடுக்கலாம்,இல்லையெனில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து வேறு மாவட்ட ஆட்சியரை கோவைக்கு பணியமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.