வார்டு 13: கோவையில் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சாலை பாதுகாப்பு சங்கத்தினர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நெபுலைசர் மாஸ்க் அணிந்து வந்து, 13 ஆம் வார்டு பகுதியில் உள்ள காற்று மாசுபாட்டை உணர்த்தும் வகையில் சாலை பாதுகாப்பு சங்கத்தினர் நூதன முறையில் மனு அளித்தனர்.


கோவை: மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நெபுலைசர் மாஸ்க் அணிந்து வந்து, 13 ஆம் வார்டு பகுதியில் உள்ள காற்று மாசுபாட்டைஉணர்த்தும் வகையில் சாலை பாதுகாப்பு சங்கத்தினர் நூதன முறையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு அளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, கோவை மாநகராட்சி 13வது வார்டு உருமாண்டம்பாளையம் பகுதியில் தர்ஷன் அவென்யூ எதிரில் உள்ள தனியார் தோட்ட நிலத்தில் பழைய கார் உதிரிபாகங்கள் பிரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியில் டயர்கள், மின் வயர்கள், கார் சீட் கவர்கள் கம்பெனியின் வெளியே வைத்து எரிக்கபடுவதாக தெரிகிறது. அதேபோல, அப்பகுதியில் உள்ள அலுமினியம் உருக்கும் ஆலையில் இருந்து வரும் புகையால் காற்று மாசு அடைவதாகவும்,ரசாயனக் கழிவுகள் பூமிக்குள் சென்று நிலத்தை பாதிக்கிறது.

இங்கு ஏற்படும் தீயால் அந்த பகுதி பெரும் புகை மண்டலமாக மாறுவதால், தர்ஷனா கார்டன், சீனிவாசா நகர். எஸ்.கே.வி கார்டன், வி.ஐ.பி கார்டன், சூர்யா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த அபுகை மண்டலம் காரணமாக இங்கு குடியிருப்பவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்கள் வருகிறது, என்று மனுவில் கூறியுள்ளனர்.

எனவே, இதுகுறித்துஉரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மனு அளித்துள்ளனர்.



மனு அளிக்க சென்ற அவர்கள் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சென்றுமாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் நீலமேகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மருத்துவமனையில் ஐ.சி .யூ யூனிட்டில் உள்ளது போல்நூதன முறையில் மூக்கில் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சென்று மனு அளித்தது அங்குள்ளவர்களை திகைப்படைய செய்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...