வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.285 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்க நாளை டெண்டர் திறப்பு.

கோவை வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூபாய் 285 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூ. 285 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

2011-இல் கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு கிராம ஊராட்சி இணைக்கப்பட்டன. தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகளாக இருந்த பகுதிகளில் மட்டும் அம்ரூட் திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு கழிவுநீர் சுத்தம் செய்யும் நிலையம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம், துடியலூர், காளப்பட்டி, வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பேரூராட்சிகள், விளாங்குறிச்சி கிராம ஊராட்சி போன்ற இணைப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

மேலே குறிப்பிட்ட இப்பகுதிகள் வளர்ந்து வரும் நிலையில், பாதாள சாக்கடை இல்லாதது குடியிருக்கும் மக்களை பெரிதும் பாதிக்கிறது. அப்பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கு ஆசிய வங்கி பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு 285 கோடி ரூபாய் பாதாள சாக்கடை அமைக்க டெண்டர் விடப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, நாளை அதற்கான டெண்டர் திறக்கப்படவுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த பணியை மேற்கொள்ள இருக்கிறது. நாளை டெண்டர் முடிவு செய்யப்படுவதை தொடர்ந்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...