கோவையில் அடுமனை தொழில்நுட்பம் (Bakery technology) குறித்து 2 நாட்கள் பயிற்சி முகாம்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ரூ.1500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


கோவை: அடுமனைத்‌ தொழில்நுட்பம்‌ பற்றிய இரண்டு நாட்கள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வருகிற 09.05.2022 மற்றும்‌ 10.05.2022 ஆகிய தேதிகளில்‌ நடைபெறகிறது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் வெளியிட்டயுள்ள செய்திக்குறிப்பில்,

"அடுமனை உணவுப்‌ பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான, முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌, பல்சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதே ஆகும்.

வளர்ந்து வரும்‌ இவ்வடுமனைத்‌ தொழில்நுட்பங்கள்‌ சிறுதொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின் போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்களான, 1. ரொட்டி வகைகள் 2. கேக்‌ மற்றும்‌ பிஸ்கட்‌ 3. பப்ஸ்‌, கட்லெட்‌ மற்றும்‌ சமோசா ஆகியவை எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ மற்றும்‌ ஏனைய ஆர்வலர்கள்‌ ரூ.1,500 + 18% GST செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌:

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌கல்லூரிமற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...