'தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது'- பல்லக்கு தடையை நீக்குங்க.. பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்..!

தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் சென்று அருளாசி வழங்க அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும், இது போன்று இருக்க கூடிய தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்குவதோடு, தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. பழமையான சைவ ஆதீனமான இங்கு 27-வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.

இவர் 2019-ல் பதவியேற்ற போது மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிப் பல்லக்கில் ஆதீன கர்த்தர் அமர்ந்து இருக்க மக்கள் அவரை சுமந்து வந்தனர்.

அதன்பிறகு வைத்தீஸ்வரன் கோவில், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திராவிடர் கழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு ஆதீனங்கள், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடை விதிக்கப்பட்டதற்குக் கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

நமது சமயம் மிக தொன்மையானது. ஏராளமான சம்பிரதாயங்களை கொண்டது. குறிப்பாகச் சைவ சமயத்தில் பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோவில்களைப் போல் ஆதினங்களிலும், மடங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு இது நீண்டகாலம் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறையாகும்.

இதில் கொத்தடிமை முறையோ, ஆண்டாள் அடிமை முறையோ, மக்களைத் துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லாமல் 'குருவே சிவம்' என சீடர்கள் சுற்றி வருகின்றனர். இது மரபு. இதற்குத் தடை விதித்திருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...