கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன்..!

குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், குப்பைகளை எடுக்க வாகனங்கள் வந்தால் தங்களிடம் பணம் கேட்பதாகவும், உள்ளிட்ட அடுக்கடுக்கான குறைகளை அமைச்சரிடம் பொதுமக்கள் முன்வைத்தனர்.


கோவை: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளையும் அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும், அடுமனையையும்(டோபி) குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.



புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு செய்யப்பட உள்ள பல்வேறு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்பு அங்கு வசித்து வரும் மக்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த போது குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பல்வேறு குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.



அங்கு பல நாட்களாக மின்சாரம் சாலை வசதி தெரு விளக்குகள் இன்றி தவித்து வருவதாகவும், ரேசன் கார்டு மாற்றம், ஆதார் கார்டு மாற்றம் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி தரப்பிலிருந்து செய்து தரப்படவில்லை என தெரிவித்தனர்.



மேலும் குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுப்பதில்லை எனவும், குப்பைகளை எடுக்க வாகனங்கள் வந்தால் தங்களிடம் பணம் கேட்பதாகவும், அமைச்சரிடம் தெரிவித்தனர். எனவே தங்கள் குறைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொண்டார்.

தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர் மாவட்ட ஆட்சியரிடம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.



மேலும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடமும் இனி குறைகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இப்பகுதி மக்கள் கூறியுள்ள குறைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது உள்ள திமுக ஆட்சி முதல்வன் இதனை மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கொண்டிருப்பதாகவும், இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மக்கள் அளிக்கும் தொகையும் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உட்பட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...