கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்ற போலீசார் கமிஷனரிடம் வாழ்த்து..!

1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோவை மாநகரில் பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீஸ் கமிஷனரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக போலீசில், 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த, 151-பேர் கோவை மாநகரில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் மொத்தம், 25-ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். இதில், 10-ஆண்டுகள் ஏட்டுக்களாக பணியாற்றி இருக்க வேண்டும். இதன்படி கோவை மாநகரில், 151-பேர் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர்.



இவர்களில், 136-பேர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களிலும், நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திலும் பணியாற்றி வருகின்றனர்.



மீதி 15-பேர் ஆயுதப்படையில் ஏட்டுக்களாக பணியாற்றி வந்தனர்.



பதவி உயர்வு பெற்ற, 136-பேர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், துணை கமிஷனர்கள் மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...