'எங்க கடையை எங்களுக்கே கொடுங்க..' முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம்: வியாபாரிகள் கைது..!

தங்கள் கடைகளை தங்களுக்கே வழங்க வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவை பெரிய கடைவீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோர கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில் மார்க்கெட்டில் கடைகளை ஏலம் எடுத்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பால் தங்கள் கடைகள்(88-கடை வியாபாரிகள்) தங்களுக்கு கிடைக்காது என்றும் முதல்வர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளை தங்களுக்கே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று கோவையில் இருந்து முதலமைச்சரை சந்திக்க சென்னை அண்ணா சமாதி வரை குடும்பத்துடன் நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாகக் காய்கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.



அறிவித்ததை போல் இன்று கோவை அண்ணா சிலை அருகில் இருந்து குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.



நடைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவரது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.



முதல்வர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் கலந்து கொண்டு உங்களது கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரியப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...