12-ம் வகுப்பு பொது தேர்வு: கோவை வால்பாறையில் 512-பேர் தேர்வு எழுதுகின்றனர்..!

வால்பாறையில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512- பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


கோவை: வால்பாறையில் 3-தேர்வு மையங்களில் 512 பிளஸ் +2 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2-வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 12-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது 3-தேர்வு மையங்களில் 512 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையாறு அணை மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

12-வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுப்பதற்கு சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...