கோவையில் குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டி கார் மீது மோதி விபத்து: ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!

கோவை துடியலூர் பகுதியில் குடிபோதையில் அரசுப்பேருந்து இயக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.



கோவை: கோவையில் குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டி கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கக்குச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (31). தற்போது கோவை நீலம்பூரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தற்காலிக அரசு பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் ரகு அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது துடியலூர் ஜி.என்.மில்ஸ் அருகே வந்த போது வேகமாக வந்த பேருந்து முன்னால் சென்ற டாக்ஸி மீது பலமாக மோதியுள்ளது.

இதையடுத்து, டாக்ஸியில் இருந்து இறங்கி வந்து ரகுவிடம் கேட்டபோது, அவர் மது போதையிலிருந்தது தெரியவந்தது. இதனால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் போதையிலிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூடினர்.

மேலும், அவர் நீண்ட தொலைவாக மதுபோதையில் வேகமாக அரசு பேருந்தை இயக்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் ரகுவை பொது மக்களை பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, துடியலூர் போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...