சிங்காநல்லூர் குளம் விவகாரம்: கோவை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!

சிங்காநல்லூர் குளத்தில் தடையை மீறி மீன் பிடிப்பது ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நீதிமன்றத்தில் ஆஜரானார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சிங்காநல்லூர் குளம் 288-ஏக்கர் பரப்பு கொண்டது. இப்பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120- வகையான பல்லுயிர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

396-வகை தாவரங்கள் 160-வகையான பறவைகள் 62-வகையான பட்டாம்பூச்சிகள் 22-வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.

அதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இக்குளத்தில் தடையை மீறி மீன் பிடிக்கப்பட்டது, கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டது.

குளத்தின் அருகே மீன்கள் வியாபாரமும் செய்யப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் தனிநபரால் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு 10-ஆயிரம் அபராதம் விதித்தும், கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனிடையே சிங்காநல்லூர் பகுதியில் பறவைகள், தாவரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ‘க்யூப்’ எனும் அமைப்பினர் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர் அதற்கு தற்பொழுது உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...