கோவையில் சிறுமியை மேற்கு வங்கம் கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் - போக்சோவில் கைது…!

கோவையில் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.



கோவை: 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் மில் ஒன்றில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் தாஸ் என்பவர் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் தனது 15-வயது மகளுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

அந்த சிறுமியுடன் ராகுல் தாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை கண்டித்திருக்கிறார்கள். இதனை அறிந்த ராகுல், தான் சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி மேற்கு வங்காளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அழைத்துச் சென்று கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், மேற்கு வங்காளத்தில் இருந்த ராகுல் தாஸ் மற்றும் சிறுமியை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் ராகுல் தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...