மூட்டை, மூட்டையாக 'ரேஷன் அரிசி' பதுக்கல்: கோவை ரத்தினபுரியில் வீட்டில் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!

சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ரத்தினபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியில் பொது விநியோக ரேஷன் அரிசிகளை சிலர் மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்ததாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை ரத்தினபுரி ஐசக் வீதியில் உள்ள குமார் என்பவரது வீட்டில் உணவு வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வீட்டின் உள்ளே மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மூட்டைக்கு தலா 50-கிலோ வீதம், 55-மூட்டைகள் என சுமார் 2.7-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சட்டவிரோதமாக பொது விநியோகத்திற்கு வழங்கும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...