கோவை இரிடியம் மோசடி வழக்கு: ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் மூலம் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது அம்பலம்…!

மனோகரனை இரிடியம் இருப்பதாக கூறி கோவை வரவழைத்தது யார்? மீதி பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் "இரிடியம்" உள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை ரூபாய். 30 லட்சத்துடன் கோவைக்கு வர சொல்லி, அதை நம்பி கோவை வந்த மனோகரன் தங்கியிருந்த ஓட்டல் விடுதிக்கு வந்த மர்ம நபர்கள் போலீசார் என்று கூறி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விசாரணையில் பல்வேறு திடிக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை இரிடியம் உள்ளதாக கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் வரவழைத்துள்ளார். மேலும், விலை மதிப்புமிக்க இந்த இரிடியத்தை வாங்க ரூ.30 லட்சத்துடன் வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி, மனோகரன் ரூ.30 லட்சம் பணத்துடன் தனது கார் ஓட்டுனர் வேலு என்பவருடன் கடந்த ஏப்ரல் 18ம் தேதி, சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.



அப்போது, மாலை 7 மணியளவில் மனோகரன் தங்கியிருந்த அறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் போலீஸ் எனக்கூறி மனோகரனை மிரட்டியதோடு, அவரிடமிருந்து ரூ.30 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சுதாரித்துக்கொண்ட மனோகரன், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் ஓட்டுனர் வேலுவிடம் விசாரணை நடத்தினர். முதலில், முன்னுக்கு பின் முரணாக பேசிய வேலு, பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பணத்துடன் மனோகரன் கோவை வருவதை அறிந்து கொண்ட வேலு, தனது நண்பர்களான தேனியை சேர்ந்த நிர்மல் செல்வன் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, அன்று மாலை வேலு, வெளியே சென்ற போது, மனோகரன் தனியாக இருக்கும் தகவலை கூட்டாளிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த இருவரும் மனோகரனை மிரட்டி, பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வேலு உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூவரும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு தொகையை, கோவையை சேர்ந்த இருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மனோகரனை இரிடியம் இருப்பதாக கூறி கோவை வரவழைத்தது யார்? மீதி பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...