12ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்: கோவையில் 35 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 35 ஆயிரத்து 113 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு நெறிமுறைகளை மாநில தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது.



தேர்வினை, 35,113 மாணவ - மாணவிகள் எழுதுகின்றனர்.



காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வு மையம் கூறியுள்ளது.



பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி, வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும், எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைப்படி தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...