கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இதுவரை 27 1/2 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படைகள் கடந்த ஒரு மாத காலமாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம், புதிய நபர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே விசாரணை நடத்திய நபர்களையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரும் போலீசார், புதிய நபர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 210 பேருக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கு மேலாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 29, 30 ஆகிய இரண்டு தினங்கள் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, இன்று காலை 10.30 மணி அளவில், கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில், பூங்குன்றன் தனிப்படை போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம், நடத்தப்பட்ட விசாரணையின் போது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் யார் யாருக்கெல்லாம் எளிமையாக அனுமதி வழங்கப்பட்டது?, அங்கு முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் அறைக்குள் செல்ல யார் யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும்? ஓட்டுநர் கனகராஜ் ஜெயலலிதாவிடம் பணியாற்றிய போது எந்த மாதிரியான செயல்பாடுகளை செய்து வந்தார்? என்பது தொடர்பாக போலீசார் கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இன்று காலை 10.30க்கு தொடங்கிய விசாரணை ஒன்பதரை மணி நேரத்திற்கு, பிறகு இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது. அதன்படி, 3 நாட்களில் கிட்டத்தட்ட 27 1/2 மணி நேரம் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் உயிரிழந்ததை அடுத்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் விரைவில் இந்த வழக்கில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பூங்குன்றனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.