பரம்பிக்குளம் - ஆழியாறு பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லைகளிலிருந்து, வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் இணைப்பை துண்டிக்கவும், கூட்டு கண்காணிப்பு குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் எடுக்கப்படுவதால் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

தொடர்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை மற்றும் மின்சார வாரியம் அடங்கிய கூட்டுப் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாயை ஒட்டி உள்ள தடை செய்யப்பட்ட எல்லையிலிருந்து வணிக நோக்கத்திற்காக தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் கூட்டுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...