ஓராண்டு நிறைவு: திமுக அரசின் சாதனைகள் குறித்து கோவையில் புகைப்பட கண்காட்சி..!

"ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கோவை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கோவை வ.உ.சி மைதானத்தில் இம்மாதத்திற்குள் தமிழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக 10 நாட்களுக்கு "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல், மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சுகாதாரத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை, மின்சார வாரியம், பள்ளிக்கல்வி, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சி, தீயணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, ஆவின், கால்நடை பராமரிப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்படும்.

மேலும், கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள் அனைத்து நாட்களிலும் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கண்டுகளிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல்துறை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜெயச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...