கலைஞர் செய்ததை ஸ்டாலின் செய்வாரா? கோவையில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

கலைஞர் ஆட்சியில் ஒப்பந்த முறை செவிலியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்தது போலவே தற்போது உள்ள முதல்வர் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் தங்களை பணி நிரந்திரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வரும், தங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலும், அதன் பின்பு பணி நிரந்தரம் செய்வதாக கூறி வேலை வழங்கிய நிலையில் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறிய 356-வது வாக்குறுதி (ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்)-யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 2006-ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடனே ஒப்பந்த முறையில் பணி செய்து வந்த செவிலியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்தது போலவே தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமலஷ்மி, கடந்த 7-வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



தமிழகம் முழுவதும் சுமார் 8000-க்கும் மேற்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தாங்கள் பணி செய்ததாக தெரிவித்த அவர் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை முதல்வர் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதல்வரின் கவனத்திற்காக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...