வால்பாறையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனு பெரும் முகாம்..!

இந்த முகாமில் 364-மனுக்கள் பெறப்பட்டது. இதற்கான தீர்வு காணப்பட்டு வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் சிறப்பு மனு பெரும் முகாம் சார் ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காகத் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு ஏற்பட்டு நலத்திட்டங்களைச் செய்வதற்கு தமிழக அரசு அறிவுறுத்தல் செய்தது.

இந்நிலையில், வால்பாறையில் துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மனு பெறும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்குத் தேவைகளை மனுவாக எழுதி சார் ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.



வால்பாறை அருகே உள்ள நெடுங்குன்றம் ஆதிவாசி பழங்குடியினர் கிராமத்துக்குச் சாலை வசதி வேண்டும் என்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகை மற்றும் இருசக்கர வாகனங்கள் வேண்டுமென்றும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வேண்டும் என்றும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் மக்கள் மனுக்கள் பெறப்பட்டது.

காலை சுமார் 11-மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் 364-மனுக்கள் பெறப்பட்டது. இதற்கான தீர்வு காணப்பட்டு வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...