கோவையில் சினிமாவை மிஞ்சும் நூதன வழிப்பறி..! ஐ.டி ஊழியரை சிறைப்பிடித்து, போன்-பே மூலம் ரூ.72 ஆயிரம் திருட்டு…?

கோவை தண்ணீர்பந்தல் அருகே ஐ.டி ஊழியரை, இரு மர்ம நபர்கள் வழிமறித்து, ஒருவர் அவரை சிறைப்பிடித்து வைத்துகொண்டும், மற்றொருவர் அவரது செல்போனை எடுத்துச் சென்று நகை வாங்கி விட்டு, பின்னர் அவரை விடுவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சமீபத்தில் கோவையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை தண்ணீர்பந்தல், பகுதியில் ஐ. டி ஊழியரை வழிமறித்து, அவரது செல்போனை எடுத்துச் சென்று போன் பே ஆப் மூலம் நகை வாங்கி விட்டு, பின்னர் அவரை விடுவித்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் விசாரணையில், கோவை கணபதி மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் சியாம்குமார் (25), ஐ.டி ஊழியர்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் தண்ணீர்பந்தல், எப்.சி.ஐ சாலையில் சென்று கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டதாக தெரிகிறது. பின்னர், அவர் தண்ணீர்பந்தல் சாலை லட்சுமி நகர் அருகே இறக்கி விடும்படி கூறியுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மற்றொரு நபருடன், சேர்ந்து ஷயாம்குமாரை பிடித்து அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டனர். மேலும், அவரது போன்-பே செயலியின் ரகசிய பின் கோடையும் வாங்கியதாகத் தெரிகிறது.

பின்னர், ஒரு நபர் ஷியாம்குமாரை சிறை பிடித்துக் கொண்டும், மற்றொரு நபர், அவரது செல்போனை எடுத்துக்கொண்டு பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள நகைக் கடைக்குச் சென்று, அங்கு ரூ.72,500க்கு தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

அதன் பின்னர், மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து ஷாம்குமாரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து, இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நூதன திருட்டு குறித்து ஷாம்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிச் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முன்னதாக, நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான அந்த மர்ம நபரின் காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட நபர் விவரித்த சம்பவம் உண்மை தானா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...