'எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு'- கோவையில் எல்ஐசி ஊழியர்கள் நடத்திய இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம்..!

இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை மாநகரில் எட்டு இடங்களில் 11-மணி முதல் 1-மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.



கோவை: எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கோவையில் எல்ஐசி ஊழியர்கள் 2-மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதைத்தொடர்ந்து கோவையிலும் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை மாநகரில் எட்டு இடங்களில் 11 மணி முதல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...