கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில் உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49-கோடி மதிப்பீட்டில்‌ மேம்பாட்டுப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில் உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின்‌ போது மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உடனிருந்தார்‌.

இந்த ஆய்வின்போது மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49-கோடி மதிப்பீட்டில்‌ நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்துள்ளார்‌. தற்போது சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

சுமார்‌ 2.3-கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகளில்‌, 208-மீட்டர் தொலைவிற்கு பணியானது நடைபெற்றுள்ளது. சங்கனூர்‌ பள்ளம்‌ கரையின்‌ இரு பகுதிகளிலும்‌ அடித்தள கான்கரீட்‌ 4.5-மீட்டர் அகலத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளின்‌ தரம்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, தொடர்ந்து பணிகள்‌ செய்து முடிக்க இரு பகுதிகளிலும்‌ உள்ள ஆக்கிரமிப்புகள்‌ அகற்ற மாநகராட்சி சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என மேயர்‌ தெரிவித்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ 18-வது வார்டுக்குட்பட்ட மணியகாரன் பாளையம்‌ நல்லாம்பாளையம்‌ தார்‌ சாலை மிகவும்‌ பழுதடைந்துள்ளதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சாலையைச் சரிசெய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தினார்‌.

பின்னா்‌, 32-வது வார்டு, நாராயணசாமி வீதியில்‌ ரூ.33.60 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்ற வரும்‌ சிறுவர் விளையாட்டுத்திடல்‌ கட்டுமானப்பணியினை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அதன்‌ பின்னர், சங்கனூர்‌ மயானத்தை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, எரியூட்டு மயானத்தைத் தானியங்கி மயானமாக மாற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மண்டல உதவி ஆணையார்கள்‌ சரவணன்‌, சங்கர், உதவி செயற்பொறியாளர்‌ (Jnnurm & Water Supply) இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ ரா.பார்த்திபன்‌, எ.கிருஷ்ணமூர்த்தி, பேபிசுதா ரவி, வைரமுருகன்‌ என்கிற முருகன்‌, ஆர்‌.பிரபாகரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ பரமசிவம்‌, இராமசாமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...