கோவையில் அட்சய திருதியை முன்னிட்டு 50 கோடி மதிப்பில் 100 கிலோ தங்க நகைகள் விற்பனை: தங்க நகை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் அனைத்து தங்க நகைக் கடைகளில் ஓரளவு நல்ல விற்பனை காணப்பட்டது. இதனால், தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: அட்சய திருதியை முன்னிட்டு தொழில் நகரான கோவையில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மோதிரம், தோடு உள்ளிட்ட சிறிய நகைகள் மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியகோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-



அட்சய திருதி தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை நாளன்று வழக்கத்தைவிட தங்க நகைகள், பவுன் காசு, உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகம் காணப்படும்.

அந்த வகையில், அட்சய திருதியை நாளான இன்று கோவை நகரில் உள்ள கடைகளில் மட்டும் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மோதிரம், தோடு, சின்ன செயின் உள்ளிட்ட சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கவே பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அட்சய திருதியை தினத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நகைகள் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் அனைத்து தங்க நகைக் கடைகளில் ஓரளவு நல்ல விற்பனை காணப்பட்டது. இதனால் தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு முத்து வெங்கட்ராம் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...