கோவை தெப்பக்குளம் வீதி அருகே வாடகை வீட்டில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை…!

கோவை தெப்பக்குளம் லிங்கப்பச்செட்டி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முஜிபூர் மாலிக் (24) என்பவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தீவிர விசாரணை.

கோவை: கோவை தெப்பக்குளம் லிங்கப்பச்செட்டி வீதியை சேர்ந்தவர் கோபால் (51). இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். 

அதில், மூன்றாவது தளத்தில் முஜிபூர் மாலிக் (24) என்பவர் கடந்த 2020 ஆண்டு முதல் தனது உறவினர்கள் நான்கு பேருடன் வசித்து வந்தார். மேலும், அவர்கள் சேலை உள்ளிட்ட ஆடைகளுக்கு எம்பிராய்டரி செய்யும் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நீண்ட நாட்களாக வாடகை தராமல் இருந்ததாக தெரிகிறது. மேலும், வாடகை கேட்க செல்போனில் அழைத்தபோதும் போனை எடுக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த கோபால் நேற்று இரவு மூன்றாவது தளத்தில் வாடகைக்கு இருந்த மாலிக்கின் வீட்டிற்குள் சென்று பார்த்தார். 

அப்போது, வீடு திறந்திருந்து யாரும் இல்லாத நிலையில், அங்கு அதிக துர்நாற்றம் வீசியதால், பூட்டப்பட்டிருந்த சமையல் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் முஜிபூர் மாலிக் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவர் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்.எஸ். புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? அவர் கொல்லப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?அவருடன் இருந்த உறவினர்கள் எங்கு சென்றார்கள்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...