கோவையில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு…!

இன்று மாலை, கோவை வாளையாறு அருகே உள்ள புதுப்பதி மலை கிராமம், அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை வாளையாறு அருகே உள்ள புதுப்பதி மலை கிராமம், அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - கேரளா எல்லையான வாளையாறு அருகே தமிழக எல்லையில் புதுப்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.



இந்நிலையில், இன்று மாலை புதுப்பதி மலை கிராமத்திற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து, தோட்ட உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர்.



சிறிது நேரம், அதே பகுதியில் நின்ற யானை, அருகே இருந்த குட்டைக்கு சென்று நீர் அருந்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. தகவலறிந்து வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள், யானை முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும் வரை உடன் சென்று விரட்டினர்.

மாலை நேரத்தில், திடீரென ஒற்றை காட்டு யானை தோட்டத்திற்குள் புகுந்ததால் புதுப்பதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...