முதல் முறையாக கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர தனியார் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது, சாய்பாபா பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவை, விரைவில் துவக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மீகச் சுற்றுலா செல்கின்றனர்.
பல்வேறு, மாநிலங்களில் இருந்தும் ஷீரடிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கோவையில் இருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து வசதி இல்லை. கோவையில் இருந்து விமானம் மற்றும் ரயில்களில் வேறு ஊர்களுக்கு சென்று அங்கிருந்து ஷீரடிக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஷீரடிக்கு ஐந்து நகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்காக, பிரதமர் மோடியின் 'பாரத் கௌரவ்' என்ற திட்டத்தின் கீழ், ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. இதில், கோவையும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கோவையில் இருந்து ஷீரடிக்கு, ஷீரடியிலிருந்து கோவைக்கும் வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம், மந்திராலயா வழியாகச் செல்வதால், பக்தர்களுக்கு ஷிரடி மற்றும் மந்திராலயா என இரண்டு கோவில்களுக்கும் செல்வதற்கு இந்த இரயில் மிக பயனுள்ளதாக இருக்கும்.
சாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், முதல் முறையாக தனியாரால் இயக்கப்படவுள்ள இந்த ரயில், முழுக்க முழுக்க இரண்டடுக்கு ஏசி வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்டதாக தயாராகி வருகிறது. சாய்பாபா பக்தர்கள் மகிழ்விக்கும் வகையில், மிகவும் தரமான சைவ உணவு வகைகள், ஆன்மீக இதழ்கள் போன்றவை இந்த ரயிலில் வழங்கப்படவுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய் வாய்ப்படுவோர்க்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், உதவவும் இந்த ரயிலிலேயே மருத்துவர்களும், உதவியாளர்களும் பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலான விருந்தோம்பல் உடனும் இந்த ரயில் சேவை அமையுமென்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்.,29 லிருந்து இந்த ரயில் இயக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மே 15 லிருந்து இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எப்போதிலிருந்து இயக்கப்படுவது என்பது குறித்து, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மிக விரைவில் "சாய்" ரயில் சேவை தொடங்கும் என சாய்பாபா பக்தர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.