கொடநாடு வழக்கு - முன்னாள்  எம்.எல்.ஏ ஆறுகுட்டியின் உதவியாளரிடம் விசாரணை….!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, நாராயணசாமியிடம் இன்று தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் இன்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை கடந்த சில நாட்களாக போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படைகள், ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களிடம் மறு விசாரணை நடத்தி வருவதோடு, புதிய நபர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். 

இதுவரை, இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன், உதவியாளர்கள், அதிமுக பிரமுகர்களான அனுபவ் ரவி, சஜீவன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்துவிட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த பல்வேறு தரப்பினரிடமும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் ஓட்டுனராக பணியாற்றி வந்த கனகராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர்,அங்கிருந்து அவர் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ஆறுக்குட்டியிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, நாராயணசாமியை விசாரணைக்கு அழைத்த நிலையில், அப்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்ததால் ஆஜராகவில்லை என்பதால், மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்த நிலையில், நேற்று மே 2 ஆம் தேதி அவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...