சூலூர் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி….!

கோவை மாவட்டம் சூலூர் கல்குவாரி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:கோவை மாவட்டம் சூலூர் கல்குவாரி பகுதியில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஹரிஹரன் (15),அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹரிஹரன் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சூலூரை அடுத்த பட்டணத்தில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது, அவர் நண்பர்களில் இருவர் நீச்சல் தெரியாததால் குளிக்கவில்லை. ஆனால், மற்ற நான்கு கல்குவாரியில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

சிறிது நேரத்திலேயே, ஹரிஹரன் தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்கியுள்ளார். அதனைப் பார்த்த, அவரதுநண்பர்கள், சக நண்பனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் சிறுவன்தண்ணீரில் முழுவதும் மூழ்கியுள்ளார்.

இதற்கிடையில், மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் விபத்து குறித்துசூலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர்,

தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், இரவு நேரம் என்பதால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. இதையடுத்த, காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...