நூல் விலை உயர்வை எதிர்த்து 16 - 21 ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூலை, தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருவதால், நூல் விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பூரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், மாதந்தோறும் நூல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மத்திய அரசு தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று பஞ்சு இறக்குமதி மீதான வரியை சுமார் 11 சதவீதம் தள்ளுபடி செய்தது. இதனால், நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.40 விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்டதால், நூல் ஆண்டுக்கு 400 முதல் 440 வரை விலை அதிகரித்துள்ளது. ரகம் வாரியாக விலை வேறுபட்டாலும் பல மடங்கு உயர்ந்துள்ளது, திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில், திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பூர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.



இதில், திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் தேவை போக மீதம் இருக்கும் பஞ்சு மற்றும் நூலை மட்டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதனால் நாள் ஒன்றுக்கு 200 கோடி உற்பத்தி இழப்பு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...