மே 4ஆம் தேதி தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: 20 ஆம் தேதி வரையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வரும் 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.


கோவை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்த நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் கோடை வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த வெயில் இன்னும் நீடிக்கும் என்பது போல நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது.

இந்த உச்ச பட்ச வெப்பகாலம் 28ம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால் வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் சதம் நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக திருத்தணி மற்றும் வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

திருச்சி 41; மதுரை காஞ்சிபுரம் கரூர் பரமத்தி 40; சேலம் ஈரோடு மாதவரம் 39; சென்னை விமான நிலையம் தர்மபுரி தஞ்சாவூர் திருநெல்வேலி 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேற்கண்ட 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...