கோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 'மது விற்பனை' படுஜோர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக மனு..!

பல்வேறு இடங்களில் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரத்தை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரத்தை தாண்டி பல்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரங்களை (பகல் 12 முதல் இரவு 10) மீறி அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்து வைத்து விற்பனை நடைபெறுவதாகவும், வயது வரம்பின்றி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் மனு அளிக்க வந்தவர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதால், வகுப்பறைகள் மற்றும் பொது இடங்களில் ஒழுங்கீன பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க வேண்டும் எனவும், டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகளின் தரம் அடிக்கடி பரிசோதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...