தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC-பட்டியலில் சேர்த்திட வேண்டும் - கோவையில் அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டம்..!

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை SC-பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி OBC-பிரிவில் சேர்த்திட வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை OBC-பட்டியலில் சேர்த்திட வேண்டும் என அகில இந்திய மள்ளர் பேரவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை SC பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி OBC பிரிவில் சேர்த்து இட வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மள்ளர் எழுச்சிப் பேரவை தலைவர் மனுநீதிச் சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ௫௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனு நீதி சோழன், இதற்கு முன்பாகவே தேவேந்திர குல வேளாளர் சமூகம்OBC பட்டியலில்தான் இருந்ததாகவும், ௧௯௩௬/ல் SC பட்டியலுக்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து ஓராண்டிற்கு முன்பு மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு இது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்தும் மாநில அரசு கடந்த 8 மாதங்களாக மாநில அரசுஎவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.



இதனால் SC பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படுமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து சமூகத்தினருக்கும் சலுகைகள் வழங்ப்பட்டுதான் வருவதாகவும் SC பட்டியல் மக்கள் உயர் பதவிகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்றும் எனவே தங்களை முன்பிருந்தவாரே OBC பட்டியலில் சேர்க்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் இந்திரசேனா அமைப்பினரும் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...