'வேண்டாமே குழந்தை திருமணம்': குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் திருப்பூர் ஆட்சியர் உத்தரவு..!

திருப்பூர் மாவட்டத்தில், குழந்தைகள் திருமணம் நடப்பது அதிகரித்துள்ளதால், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பூர்: குழந்தை திருமணங்களை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, திருப்பூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில், தொழில் நிமித்தமாக, பிற மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்கள், அதிக அளவில் வசித்து வருகின்றனர். குடும்ப சூழல் காரணமாக, 18-வயது பூர்த்தியாகாத சிறுமிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது.

ஆங்காங்கே, பொதுமக்கள் கூறும் தகவல் அடிப்படையில், சமூக நலத்துறையினர், கள ஆய்வு செய்து, திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். சில நேரங்களில், திருமணம் நடந்த பிறகும், 18 வயது பூர்த்தியாகும் வரை, கல்வியை தொடர ஏற்பாடு செய்கின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், குழந்தைகள் திருமணம் நடப்பது அதிகரித்துள்ளதால், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வினீத் கூறியதாவது:-

அக்ஷய திருதியை முன்னிட்டு, குழந்தை திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக புகார் வந்துள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டு லைன், இந்து அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்களைக் கொண்டு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். குழந்தை திருமணம் நடப்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...