கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திடலில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கோவை: ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவையில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திடலில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு, கொரொனா காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டுசிறப்பு தொழுகையில் ஜாக் கமிட்டியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்லாமிய பெரும்பான்மை பிரிவான, சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை மற்றும்ரமலான் பண்டிகை நாளை தான் கொண்டாடப்பட உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.